Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மியான்குள பகுதியில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையால் கொட்டப்பட்டு வந்த திண்மக் கழிவுகள் அகற்றப்படுவதாக, அந்த இடத்தில் மீள் மர நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
புணாணை கிழக்கு கிராம சேகவர் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பகுதியில் திண்மக் கழிவுகள் கொட்டப்படுவதனால் அப்பகுதியில் யானைகள் வருவதால் விவசாயிகள், போக்குரவத்துப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச சபையின் ஆளனியைக் கொண்டு துப்பரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக பிரதேச சபை செயலாளர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் புணாணை கிழக்கு மியான்குள பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு கொட்டப்பட்ட திண்மக் கழிவுகள் 97 சதவீதமானவை அகற்றப்பட்டுள்ளது.
“மியான்குள திண்மக் கழிவு அக்கற்றப்பட்ட இடத்தை மேம்பாடு செய்யப்பட்டு வனஇலகா திணைக்களத்துடன் இணைந்து மீள் மர நடுகை நடவடிக்கையை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.
“வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் சேரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளில் உக்கக் கூடியவற்றை ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குள் சூடுபத்தினசேனை கிராமத்தில் அமைந்துள்ள பசளை தயாரிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதோடு, உக்க முடியாத திண்மக் கழிவுகளை கொடுவாமடு பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றோம்.
“வீட்டு உரிமையாளர் தங்கள் வீடுகளிலும், கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளிலும் சேகரிக்கின்ற திண்மக் கழிவுகளில் உக்கக் கூடியவை, உக்க முடியாதவற்றை வேறாக தரம்பிரித்து பிரதேச சபையின் வாகனங்களுக்கு கையளிக்க வேண்டும். அவ்வாறு தரம்பிரித்த திண்மக் கழிவுகளை மாத்திரமே பிரதேச சபை பாரம் எடுக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்” என்றார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago