2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

குழந்தை பெற்ற மாணவிக்கும் காதலனுக்கும் விளக்கமறியல்

Freelancer   / 2025 மார்ச் 02 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்று வலி என தெரிவித்து அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அதிகாலை 5.00 மணிக்கு மலசலகூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து யன்னல் வழியாக வீசிய நிலையில் குழந்தை ஜன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் வீசிய குழந்தையை மீட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், குறித்த மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயதுடைய காதலனை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரையும் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X