Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 05 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
“இந்த நாட்டில் இனவாதத்தைத் தூண்டி, இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்த இந்த நாட்டு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது” என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நேற்று (04) மாலை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐ.தே.கவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஸாபியின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டில் சில இன ரீதியான குழுக்கள், இனவாதத்தைத் தூண்டி இன மோதலை உருவாக்க முயற்சிக்கின்றன.
“அதற்கு யாரும் துணை போகக் கூடாது என்பதுடன், இந்த நாட்டை இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.
“இந்த நாட்டில் சர்வதேச சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டை குழப்ப நிலைமைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தபோது, இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
“கடந்த 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மட்டக்களப்பிலும் அபிவிருத்திகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
“மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள்களை பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025