2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கைகளைக் கழுவுமாறு கூறிய மனைவி மீது தாக்குதல்

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், க.விஜயரெத்தினம்

வெளியில் சென்று வந்த கணவன், வீட்டுக்குள் வரும் போது கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியிலுள்ள நபரொருவர், வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் கைகளைக் கழுவுமாறும் அறிவுறுத்துதல்கள் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மனைவி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, தாக்குதலை மேற்கொண்ட நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X