2025 மே 23, வெள்ளிக்கிழமை

கொக்கட்டிச்சோலைப் படுகொலை ஞாபகார்த்த நினைவு தூபி புணரமைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், வ.துசாந்தன்

1987ஆம், 1991ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 143க்கு மேற்பட்ட பொதுமக்களின் ஞாபகார்த்தமாக கிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி, திங்கட்கிழை (22) புனரமைக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில், மகிழடித்தீவு, இறால்பண்ணை மற்றும் அச்சூழலை அண்டிய பகுதிகளில் இருந்த பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக கடந்த 2002ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டு, அதில் உயிழந்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டது. பின்னர் இந்த நினைவுத் தூபி, 2007ஆம் ஆண்டு சிதக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அவ்வாறே கட்சியளித்திருந்தது. 

இவற்றையறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணதகரமின் (ஜனா) முயற்சியினால், இத்தூபி புனரமைக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உப்பினர் ச.வியாழேந்தின், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், அப்பகுதி பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X