Editorial / 2019 மார்ச் 07 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொல்லநுலை பகுதியில் நேற்று (06) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, துப்பாக்கி ரவைகள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், செங்கல் உற்பத்திக்காக கனரக வாகனம் மூலமாக மணலைக் கிளறிய போது, மணலுக்குள் இருந்து, குறித்த துப்பாக்கி ரவைகள் மேற்கிளம்பிய நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், அவற்றை அகற்றுவதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025