Princiya Dixci / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
திருகோணமலை மாவட்டச் செயலகத்தால், மே மாதம் 2ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்ட புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள், தற்போதைய கொரோனா பரவல் அச்சம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தல் இன்றியமையாதது என வலியுறுத்திய அவர், கொரோனா வைரஸை ஒழிக்க பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் அவதானத்துடன் உரிய நடைமுறைகளை பின்பற்றி, தொழில் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மூலம் எமது செயற்பாடுகளை தங்குதடையின்றி முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அடிக்கடி கைகளை கழுவல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது என்பன முக்கியமானதாகும் என்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரச தரப்பால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதென மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் விசேட கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் (27) முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் 42 அன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் அதில் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடியில் தலா இருவரும் 5 பொலிஸாருமாக மொத்தமாக 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025