2025 மே 02, வெள்ளிக்கிழமை

கொவிட் 19 சிகிச்சைக்கு ரோபோடிக் இயந்திரம்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கொவிட்19 நோயாளர் சிகிச்சை நிலையத்துக்கான  தானியங்கி ரோபோடிக் இயந்திரமொன்று, அட்லஸ் அக்சிலா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கப்பட்டது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய  அத்தியட்சகர் திமுத் பொன்வீரவின் ஒருங்கிணைப்பின்  அடிப்படையிலும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீரின் அனுமதியுடனும், இந்த இயந்திரம், நேற்று (03) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்த ரோபோடிக் இயந்திரத்தின் மூலம்,  சுகாதார சேவை பணியாளர்களின் உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதுடன், கொவிட்19  நோயாளர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் அபாய நிலையைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

அத்தோடு,  நோயாளர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளை  நோயாளர்களின் காலடிக்கே கொண்டு வழங்குவதற்கும்  நோயாளர்கள் வைத்தியர்களுடனும் ஏனைய உத்தியோகத்தர்களுடனும் தங்களது பிரச்சினைகளுக்கான  தீர்வுகளை வீடியோ கலந்துரையாடல் மூலம் பெற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .