Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய கிழக்கு 167பி பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஏற்பாட்டில், புதிய காத்தான்குடி கிழக்கு 167பி பிரிவின் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுள்ள, கிராம உத்தியோகத்தர் திருமதி சில்மியா அன்சாரின் சேவையை பாராட்டி அவரை கௌரவிக்கும் வைபவம், புதிய காத்தான்குடி கிழக்கு பல நோக்கு மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்றது.
பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்வின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜனாபா பாத்தும்மா பரீட், புதிய காத்தான்குடி சமுர்த்தி வலய முகாமையாளர் ஏ.எல்.எம்.சுல்மி கிராம உத்தியோகத்தர் எம்.ரவூப், மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை, பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இடமாற்றம் பெற்றுள்ள கிராம உத்தியோகத்தர் திருமதி சில்மியா அன்சாரின் சேவையை பாராட்டி அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .