2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிகிச்சை பலனின்றி நான்காவது நபரும் பலி

Gavitha   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில், கடந்த புதன்கிழமை (29) இடம்பெற்ற விபத்தின் போது படுகாயமடைந்து, பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நபர், சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மத் ஷியாம் (வயது 30) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் கடந்த புதன்கிழமை பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ தினத்தன்று பலியாகினர். இதில் படுகாயமடைந்த நான்காவது நபரே இன்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X