Niroshini / 2016 மே 20 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை, கொத்தியாபுல , காஞ்சிரங்குடா கிராமங்களில் செங்கல் உற்பத்தி முயற்சிகள் 150 வரை பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வவுணதீவு பிரதேசத்தின் இலுப்படிச்சேனை, கொத்தியாபுல , காஞ்சிரங்குடா கிராமங்களில் செங்கல் உற்பத்திகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களது தொழில் உபகரணங்களும் வெள்ளத்திலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்த மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
சுயமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்ற வகையில் அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய தேவையுள்ளது. அரசாங்க அதிபரிடம் விடுத்த வேண்டு கோளுக்கு அமைய விபரங்களை பிரதேச செயலாளர் ஊடாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார் என்றும் துரைரெட்ணம் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக மட்டககளப்பு மாவட்டத்தில் பெரியளவான பாதிப்புக்கள் ஏற்படாத போதும் கிரான் தொப்பிக்கல வீதி துண்டிக்கப்பட்டிருந்தது. அதே போன்று ஏனைய சில பிரதேசங்களின் வீதிகளும் நீரில் மூழ்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago