Niroshini / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
பெய்து வரும் அடை மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதுடன் பல போக்குவரத்துப் பாதைகளும் பாதிப்புகளுக்குள்ளாகிய நிலையில் காணப்படுகின்றன.
இதன் நிமித்தம் இன்று (07) கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைராஜசிங்கம் செங்கலடி பிரதேச சபைக்குட்பட்ட செங்கலடி சந்தை வீதி, வேப்பையடி கோவில் வீதி, பிரதேச செயலக வீதி மற்றும் சித்தாண்டி கலைமகள் வீதி, நாவலர் வீதி, வாழைச்சேனைப் பிதேச சபைப் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் வீதிப் பாலம், மற்றும் கிரான் தபாற்கந்தோர் வீதி ஆகிய வீதிகளை குறிப்பிட்ட பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களுடன் சென்று பார்வையிட்டார்.
மேற்குறிப்பிட்ட வீதிகளில் தற்காலிகமாக நீரினை வடிந்தோட செய்யவும் மக்கள் போக்குவரத்துக்கு உகந்த விதத்தில் அவற்றை செப்பனிடவும் அந்தந்த பிரதேச சபைச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

46 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
6 hours ago
22 Dec 2025