2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிங்களப்பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண தமிழ்மொழிப் பாடசாலைகளில் சிங்களப் பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கக் கோரும் தனிநபர் பிரேரணையை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை  அமர்வில் தான் சமர்ப்பிக்கவுள்ளதாக அம்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மொழிப் பாடசாலைகளின்  மாணவர்களுக்கு சிங்களப் பாடத்தைக் கற்பதற்காக சிங்களப் புத்தகங்கள் வருடாவருடம் வழங்கப்படுகின்றன. இருப்பினும், சிங்களப் பாடத்துக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. இதனால், தமிழ்மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு சிங்களப் பாடத்தை கற்க முடியாத நிலை உள்ளது.  

எனவே, கிழக்கு மாகாண தமிழ்மொழிப் பாடசாலைகளில் சிங்களமொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண சபை எடுக்க வேண்டும்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X