2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிங்களமொழி படிவத்தால் சிரமம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில்த் ; திணைக்கள காரியாலயத்தில் தங்களின் கருமங்களை முடித்துக்கொள்ளச் செல்லும் சேவை நாடுவோரிடம் சிங்களமொழியில்; படிவங்கள் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான கருமங்களை முடித்துக் கொள்வதற்காக மேற்படி  தொழில் திணைக்கள காரியாலயத்தில் சிங்களமொழியில்; படிவங்கள் வழங்கப்படுவதாகவும் இதனால், தாம் சங்கடத்தை எதிர்நோக்குவதாகவும் சேவை நாடுவோர் கூறுகின்றனர்.

இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு தாம் சிங்களமொழி எழுதத் தெரிந்தவர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளதாகவும்; இது தமக்கு மேலதிகமான சுமையையும் நேர விரயத்தையும் திருப்தியின்மையையும் அவர்கள் கூறினர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகள் சிரத்தை எடுக்க வேண்டும் சேவை நாடுவோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X