2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சூடு வைக்கப்பட்ட சிறுமி உறவினர்களிடம் ஒப்படைப்பு

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி,  இரண்டு மாத சிகிச்சையின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து சிறுமியின் தாயின் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த 11.3.2015 அன்று குறித்த சிறுமி வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 13.3.2015 அன்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

தொடர்ந்து இரண்டு மாதங்கள் மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை சிகிச்சையின் பின்னர் சிறுமியின் தாயின் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காத்தான்குடி அறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த  குறித்த சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமிக்கு சூடு வைத்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மும்தாஜ் மற்றும் சிறுமியின் தந்தை மௌலவி மஜீத் ரப்பாணி ஆகிய இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 20.5.2016 வரை இவர்களின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிறுமிக்கு மேலதிகமாக பிளாஸ்ரிக் சத்தர சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறுமியை கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X