Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா
சொந்த மாவட்டத்தில் தாம் சேவையாற்றுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடம், அண்மையில் நியமனங்கள் பெற்ற 50 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெளி மாகாணங்களில் பட்டதாரிப் பயிலுநர்களாக சேவையாற்றுவதற்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்ட 50 க்கும் மேற்பட்டோர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை சந்தித்து தங்களின் பிரச்சினையை முன்வைத்துள்ளதுடன், மகஜரையும்; கையளித்துள்ளனர். இதன்போதே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
31.03.2012 க்கு முன்னர் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த பட்டதாரிகளுக்கு 12.01.2016 அன்று கொழும்பில் வழங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர் நியமனங்களில், தங்களின் சொந்த மாவட்டத்தில்; சேவையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் கவனத்துக்கு இவர்கள் கொண்டுவந்துள்ளனர்.
பயிலுநர்களாக 10,000 ரூபாய்; கொடுப்பனவுடன் பொருளாதாரச் சுமைகளுக்கு மத்தியில் வெளி மாகாணங்களில் தம்மால் சேவையாற்ற முடியாது. பட்டப்படிப்பை பூர்த்தி செய்து அரசாங்கச் சேவையில் இணைவதற்கு சுமார் 04 வருடகாலமாக எதிர்பார்த்திருந்த தம்மை, வெளி மாகாணங்களில் பயிலுநர்களாக இணைத்துள்ளமை கவலையளிப்பதாகவும் இவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பட்டதாரிப் பயிலுநர்களை சொந்த மாவட்டத்தில் சேவையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago