2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யும் சேவ்த சில்ரனும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்திய பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் பணிப்பாளர் கலாநிதி டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன்,செங்கலடி பிரதேச செயலாளர் யு.உதயசிறி,சேவ்த சில்ரன் அமைப்பின் பணிப்பாளர் ஜெகிருஸ்ணானந்தன்,வை.எம்.சி.ஏ.திட்ட தலைவர் எல்.பட்றிக்,வேல்ட் விசன் ஏறாவூர் பற்று முகாமையாளர் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,செங்கலடி மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட 25 கிராமங்களில் இருந்து 625பேருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X