2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சுமார் 750 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.சபேசன்

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் சுமார் 205 ஏக்கர் நெல் வயலும் பெரிய நீலாவணை கமநல சேவைப் பிரிவில் 550 ஏக்கர் நெல் வயலும் நீரில் மூழ்கியுள்ளன.  

கிரான் நெற்செய்கைக் கண்டத்தில் அறுவடைக்குத் தயாராகவிருந்த சுமார் 205 ஏக்கர் நெல் வயல் நீரில் மூழ்கியுள்ளதாக கிரான் பிரிவுக்குப் பொறுப்பான விவசாயப் போதனாசிரியர் பி.ரவிவர்மன் தெரிவித்தார்.

இடைப்போகமாகச் செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்களே நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பெரிய நீலாவணை கமநல சேவைப் பிரிவில் 550 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக  பெரியநீலாவணை கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வ.விநோதன் தெரிவித்தார்.

இந்நிலையில், பெரியநீலாவணை மேட்டுவட்டையில் 300 ஏக்கர் நெல்வயலும் சேனைக்குடியிருப்பு வட்டையில் 250 ஏக்கர் நெல்வயலும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X