2025 மே 08, வியாழக்கிழமை

செயற்கை அவயவங்கள் மற்றும் செவிப்புலன் கருவிகள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்கள் மற்றும் செவிப்புலன் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு றோட்டறி கெரிட்ரேச் கழகம்,சர்வதேச றோட்டறிக் கழகங்களான பாண்டிச்சேரி மற்றும் மாலைதீவு கழகங்களுடன் இணைந்து நடத்திய இம் முகாமில் ரூபாய் 7.5 மில்லியன் செலவில் 100 பேருக்கு செயற்கைக் காலும் 1.275 மில்லியன்ரூபாய் செலவில் 17 பேருக்கு செவிப்புலன் கருவிகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு றோட்டறி கெரிட்ரேச் கழகத் தலைவருமான றோட்டறியன் எஸ். கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாண்டிச்சேரி மற்றும் மாலைதீவு றோட்டறிக் கழகங்களின் தலைவர்களான சத்திவேல், ஸ்ரீகாந் ஆகியோர் செயற்கை கால் வழங்குவதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டனர்.

உலக தரிசனம், கெமிட், எதிர் நீச்சல் நிறுவனங்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு றோட்டறி கெரிட்ரேச் கழக செயலாளர் ஜெகநாதன், முன்னாள் றோட்டறிக் கழக தலைவர் டொமிங்கோ ஜோர்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X