2025 மே 08, வியாழக்கிழமை

செயல்முறை பயிற்சிக் கருத்தரங்கு

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான செயல்முறை பயிற்சிக் கருத்தரங்கு வேலைத் திட்டத்துக்கமைய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தமிழ் மொழி மூலமான பயிற்சிக் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும் சிங்கள மொழி மூலமான பயிற்சிக் கருத்தரங்கு நாளை திருகோணமலை, குலகோட்டான் மண்டபத்திலும் நடைபெறவுள்ளன.

இக்கருத்தரங்குகளில் வளவாளர்களாக ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் அலுவலக கணக்காளர் உதய ரஞ்சன் மற்றும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X