2025 மே 08, வியாழக்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாணவர்களை வீதி விபத்திலிருந்து தடுக்கும் நோக்கில் மஞ்சள்; கடவை மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, அந் நாஸர் வித்தியாலத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.

அந் நாஸர் வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.அல்லாபிச்சை தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.திலங்க துஷார ஜெயலால், பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஆர்.மயூரன் ஆகியோரினால் மாணவர்களுக்கு மஞ்சள் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

இதன்போது செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேற்படி செயலமர்வில் மஞ்சள் கடவையூடாக எவ்வாறு மாணவர்களை கடக்க வைப்பது, மஞ்சள் கடவையில் மாணவர்கள் கடக்க முற்படும்போது ஏற்படும் வீதி விபத்துகளை எவ்வாறு தடுப்பது, மஞ்சள் கடவையில் மாணவர்களை கடக்க வைக்கும் வீதியில் செல்லும் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது, அதன் பின்னர் எவ்வாறு வாகனங்களை  செய்கை மூலம் போகவைப்பது போன்றவை  தொடர்பிலும் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X