Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
நிலைமாறு கால நீதி தொடர்பான கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிரிஜ் வியூ சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குருநாதன் வளவாளராகக் கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார். அத்துடன், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஹ.இந்துமதியும் கலந்துகொண்டார்.
நிலைமாறு கால நீதி தொடர்பான தெளிவூட்டல்கள் சமூக மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இன்றைய காலகட்டத்தில் முக்கிய தேவையாக உள்ளது என்ற வகையில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையைப் பொறுத்தவரை நிலைமாறு கால நீதியினை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இதற்கான சகல விதமான ஆதரவுகளையும் ஊடகவியலாளர்கள் வழங்கியாக வேண்டும்.
நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டில் நம்பிக்கையினை மீளக் கட்டியெழுப்பல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கிகரித்தல், நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல், எதிர்காலத்தில் மீளவும் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகாதிருப்பதற்கான உத்தரவாதம் என்பவை முக்கிய பகுதிகளாக இருக்கின்றன.
அத்துடன், நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர்திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பனவற்றுக்கான தேவையும் உள்ளது.
அந்த வகையில், பிராந்தியங்களிலுள்ள ஊடகவியாலாளர்களும் பங்களிப்பு வழங்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது என்ற வகையில் நிலைமாறு கால நீதி தொடர்பில் இந்தச் செயலமர்வு நடத்தப்படுவதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் தேவ் அதிரன் தெரிவித்தார்.

5 minute ago
13 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
29 minute ago
32 minute ago