2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

ஜனநாயகத்துக்கும் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபகரணங்கள் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளுக்கு விளக்கமளிக்கும் இரு நாள்ச் செயலமர்வு  மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.

நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெற்ற இச்செயலமர்வின்போது,  வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தன்னுரிமைகளுக்கான சட்ட நிவாரணங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அக்டட் மற்றும் சொண்ட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடு செய்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X