Niroshini / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
பாடசாலை சீருடைக்கான கூப்பன் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று புதன்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மூன்றாவது நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையினை விடுத்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பாடசாலை சீருடை பரிசுக் கூப்பனுக்கான துணியைப் பெற தூரப்பிரதேச பெற்றோர் ஒருவர் தனது அன்றாட கூலியை இழந்து நகர கடைகளுக்கு வந்து அந்த சீடைக்கான துணியைப் பெறவேண்டியுள்ளது. இதனால்,அவருடைய ஒரு நாள் உழைப்பு மற்றும் மேலதிக போக்குவரத்து செலவு என்பன ஏற்படுகிறது. அத்துடன், முன்னைய இலவச சீருடை திட்டத்தில் ஒரு சில அரசாங்க அதிகாரிகள் மட்டுமே இத்திட்டத்துக்காக செயற்பட வேண்டியுள்ளது' என்றார்.
'அரசாங்கம் வழங்கிய சீருடைக் கூப்பனுக்கென தெரிவு செய்த கடை உரிமையாளர்கள் சிலர், அரசாங்கத்தால் தெரிவு செய்த துணியைத் தவிர வேறு துணிகளையும் சீருடைக்கென வழங்கி வருகின்றனர்.
இதனால், அரசாங்கம் வழங்கிய துணி எது என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
மேலும், 'திருகோணமலையில் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல கணனித் தொகுதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், ஏற்படும் மின்சார செலவினை செலுத்துவதற்கான பண வசதி பல பாடசாலைகளில் இல்லை. எனவே, இவ்வாறான பாடசாலைகளுக்கு மின் கட்டணத்துக்குகென மேலதிக கொடுப்பனவுகளை வழங்க ஆவணம் செய்யவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025