Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Gavitha / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
சிறுபான்மை இனங்களுக்குள் புதிதாக உருவாகின்ற அமைப்புக்கள் அந்தந்த சமூகத்துக்குள்ளே இருக்கின்ற கூட்டுச் சக்தியை பலமிழக்கச் செய்து விடும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூர்க் கிளை கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன் பாவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'யுத்தம் முடிந்து நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு, இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கி செயல்பட எத்தனிப்பது என்பது, முழு தமிழ் பேசும் இனத்தின் பலத்தைக் குறைப்பதற்கு எடுக்கும் முயற்சியாகவே கருதப்படுகின்றது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'கடந்த 30 வருடகாலமாக ஆயுதப் போராட்டத்தின் போது, அனைத்தையும் இழந்த போதிலும் ஒரேயொரு பலமாக இப்பொழுதும் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் சமூகத்துக்கும் அடையாளமாக இருந்து வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை மழுங்கடிக்கச் செய்யும் செயலை, எந்தவொரு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து எவரும் செய்ய அனுமதிக்கக் கூடாது.
தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த குரலாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் புத்திபூர்வமாக இடம்பெற்று வருவதை, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மறுக்க முடியாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'அதேவேளை, இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமாற்று ஆட்சியைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைத்ததன் பின்னர் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டியிருக்கின்றது.
படையினர் வசமிருந்த காணிகள் மீளக் கையளிப்பு, நிர்வாகப் பகிர்வு, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்களாக சிவில் சமூகத்தவர் நியமனம், அகதிகள் மீளக் குடியமர்வு, சம்பூர் காணிகள் விடுவிப்பு, கிழக்கு மாகாண சபையில் மூவினங்கள் இணைந்த ஆட்சி என்று ஏகப்பட்ட விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரின் அரசியல் சாணக்கிய புத்திபூர்வமான நடவடிக்கைகளால் இடம்பெற்றுள்ளன.
நிலைமைகள் இவ்வாறு சுமுகமாக நகர்ந்துச் செல்லும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதும் தமிழ் பேசும் சமூகங்களைப் பிளவு படுத்த நினைப்பதும், ஒரு சமூகத்தின் கூட்டுப் பலத்தை பலவீனப்படுத்த நினைப்பதும் துரோகச் செயல்களாகவே கருத வேண்டும்' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago