2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிறுமிக்கு சூடு; தந்தைக்கும் இரண்டாவது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் 10 வயதுச் சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தந்தைக்கும்  அவரது இரண்டாவது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  

இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இவர்கள்  இருவருக்கும் இன்று வெள்ளிக்கிழமைவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில்  மேற்படி சிறுமிக்கு அவரது தந்தையின் இரண்டாவது மனைவி நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் அவரின் இரண்டாவது மனைவியும் கடந்த 13.03.2016 அன்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X