Gavitha / 2016 மே 02 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, சிறுமியின் வளர்ப்புத் தாய் மற்றும் தந்தைய ஆகிய இருவருக்குமான விளக்கமறியல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கான விளக்கமறியல் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவியான சிறுமியின் வளர்ப்புத்தாய் மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிஸார் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago