2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, புன்னைச்சோலையில் 15 வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரை, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிதமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டார்.
 
சந்தேகநபரான புன்னைச்சோலைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார், நேற்று (21) ஆஜர் செய்யப்பட்ட போதே, நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

புனனைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் கடந்த வியாழக்கிழமை (20) கடத்திச் சென்று, துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
சிறுமியை, மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்த பின்னர், சிறுவர் நன்னடைத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X