Niroshini / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம். றியாழ் செவ்வாய்க்கிழமை(22) 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த ஆறுமுகம் நிர்மலராஜ் (வயது 32) என்பவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபர் மேற்படி சிறுமியை முறக்கொட்டான்சேனைப் பகுதியிலுள்ள மயானம் ஒன்றில் மறைவாக வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை திங்கட்கிழமை (21) இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025