2025 மே 10, சனிக்கிழமை

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய பெரியப்பாவுக்கு விளக்கமறியல்

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரசேத்தில் சிறுமியொருவர் தனது பெரியப்பாவினால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
 
தனது மனைவியின் அக்காவின் மகளான நன்கரை வயதான குறித்த சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 38 வயதுடைய குறித்த நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
 
குறித்த சிறுமியின் தாய், அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் வழமையாக தனது தங்கையிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு வேலைக்கு சென்றுவிடுவார்.
 
இந்நிலையில், குறித்த சிறுமியை தொடர்ந்தும் இச்சந்தேக நபர் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
குறித்தசிறுமி, தனக்கு சிறுநீர்கழிக்க முடியவில்லையென அழுததையடுத்து. வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியர்களின் பரிசோதனையின் போது, குறித்த சிறுமி வன்புணர்வுக்குட்பட்டமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காத்தான்குடி பொலிசாரினால் குறித்த சந்தேக நபர், புதன்கிழமை(13) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X