2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமியர் தின நடைபவனி

Thipaan   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உலக சிறுமியர் தினத்தை முன்னிட்டு 'வலிமையான பெண்கள் வலிமையான உலகம்' எனும் தொனிப் பொருளில், சிறுமிகளின் உரிமைகளை வலியுறுத்திய நடைபவனி, இன்று செவ்வாய்கிழமை (11) நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஆரம்பமான நடைபவனி பிரதான வீதியூடாகச் சென்று செங்கலடி மத்திய கல்லூரியில் முடிவடைந்தது.

'ஒவ்வொரு சிறுமிக்கும் கல்வியைப் பெற சமஉரிமை உண்டு. அதனை உறுதி செய்வோம்;, சிறுமியரின் உரிமைகளைப் பாதுகாப்போம், சிறுமிகள் நாட்டின் பெருமை, வலிமையான பெண்கள் வலிமையான உலகம்' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவண்ணம் மாணவர்கள், நடைபவனியில் கலந்துகொண்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியில், பாடசாலை மாணவர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநதிகள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X