2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை இல்லாமல் செய்யும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்    

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் தொழில் அற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ பிரகடனத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வாசித்தார்.

மாவட்ட தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஜே.திருச்செல்வம், கிழக்கு மாகாண பிரதி தொழில் ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான கே.எல்.கபீர், அம்பாறை மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் ரி.லக்ஷ்மிதரன், பிரதேச செயலாளர்கள், சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் தொழில்களில் அமர்த்துதல், அதற்கெதிரான நடவடிக்கைகள், சிறுவர் தொழிலைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கம் வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X