2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சோளம் விதைகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சோளம் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நிதியொதுக்கீட்டில், இந்த சோளம் விதைகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு, மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் வைத்து இந்த சோளம் விதைகள் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறீதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இ.கோகுலதாஸன் முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான எஸ்.கணேசமூர்த்தி உட்பட அதிகாரிகள் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, மற்றும் ஓட்டமாவடி, கிரான், ஏறாவூர் பற்று, மண்முனை வடக்கு, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 261 விவசாயிகளுக்கு, இந்த சோளம் விதைகள் வழங்கப்பட்டன.

தலா ஒவ்வொரு விவசாயிக்கும் 5 கிலோகிராம் சோளம் விதைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X