Sudharshini / 2016 மே 02 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசியப்பாடசாலை மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.
புதிய நிர்வாக சபையின் தலைவராக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக எஸ்.ஜெயராஜாவும், பொருளாளராக எஸ்.யுவராஜனும் உப-தலைவர்களாக கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் கே.ரி.சுந்தரேசன், இறைவரித்திணைக்கள பிராந்திய பிரதி ஆணையாளர் சட்டத்தரணி எம்.கணேசராஜா, திருமதி திலகா கரிதாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
துணைச் செயலாளராக தி.சரவணபவன், இணைப்புச் செயலாளராக ச.சந்திரகுமார், ஆலோசகர்களாக பேராசிரியர் மானகப்போடி செல்வராசா, பேராசிரியர் சி.மௌனகுரு, காசுபதி நடராஜா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
போசகர்களாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரபானந்தா மகாராஜ், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா யோசப், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரிஜெயசிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நேற்றைய கூட்டத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள விபுலானந்தரது 125ஆவது ஆண்டு நிகழ்வுகளுக்கான மலர் வெளியீட்டுக்குழு, நிதிக்குழு, விழாக்குழு என்பனவும் தெரிவு செய்யப்பட்டதுடன், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாளை 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுவாமி விபுலானந்தரது 124ஆவது பிறந்த தினத்தினை கல்லடியில் அமைந்துள்ள அவரது சமாதியில் காலை 7.30 மணிக்கு நடத்துவதென்றும், அதே போன்று 8.30 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்;றக் கட்டடம் அருகிலுள்ள நீரூற்றுப் பூங்காவின் சிலை அருகிலும் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தொடர்ச்சியாக சுவாமி விபுலானந்தரது பிறந்த தினம், சிரார்த்த தினம் என்பவற்றினை அனுஸ்டித்து வருவதுடன், பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago