2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிவதொண்டர் மாநாடும் ஆறுமுக நாவலரின் எழுச்சிக் கருத்தரங்கும்

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி சிவதொண்டர் மாநாடும் ஆறுமுக நாவலரின் எழுச்சிக் கருத்தரங்கும் நேற்று சனிக்கிழமை காலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, நாவற்குடா சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றத்தின் ஆதரவுடன் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளை தொடர்ந்து அதிதிகளும் மாநாட்டின் பேராளர்களும் ஊர்வலமாக மாநாட்டு மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, இறைவழிபாட்டுடன் மாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் இந்தியா பேரூர் ஆதினம் சீர்வளச்சீர் மருதாசல அடிகளார்,  நல்லை ஆதினத்தைச் சேர்ந்த முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள்,மட்டக்களப்பு இராம கிருஸ்னமிஸன் தலைவர் சதுர்புகுஜானந்தஜி மகராஜ்,அகில இலங்கை இந்து மாமமன்றத்தின் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், அதன் பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதன், மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்வரன் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத்தலைவர்களான எஸ்.தணபாலா, எஸ்.அருளானந்தம்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

முதல்நாள் நிகழ்வில்,தலைமையுரையினை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்வரன் நிகழ்த்தினார்.

இதன்போது, இந்து ஒளி எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் புனர்வாழ்வு,  மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொண்ணடனர்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நான் அமர்வில் கருத்தரங்கு மற்றும் வில்லிசை உட்பட பல நிகழ்வகள் நடைபெற்றன.

இதன்போது, எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் அகில இலங்கை இந்து மாமமன்றம் என்பன இணைந்து கௌரவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X