Niroshini / 2016 மே 10 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
நீண்டகாலங்களாக பட்டிருப்பு தொகுதியில் நிலவிவந்த இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கவுள்ளது. குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் வகையில் சகலவசதிகளும் கொண்ட ஒரு தொழிப்பேட்டையை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்துவருவதாகவும் இது சம்மந்தமாக வணிகத்துறை அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் வணிகதுத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
கோயில்போரதீவு இளைஞர் எழுச்சி ஒன்றிய கலை விளையாட்டுக்கழகம் நடத்திய விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயில் போரதீவு பொது விளையாட்டு மைதானத்தில் வே.தில்லைநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
“இன்று பாருங்கள் எமது நாட்டிலே அனைத்து மக்களும் எவ்வித அச்சமும் இன்றி வாழ்வதற்கான காலச்சூழல் தற்போது நிலவுகின்றது. இன, மத, மொழி பேதமின்றி யாரும் எமது நாட்டிலே எவ்விடத்துக்கும் சென்று வரலாம். இப்படியானதொரு நிலைமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தி தந்துள்ளது.
விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க இப்படியான நிகழ்வுகளை செய்வது மிகவும் நல்லதொருவிடயம். ஒரு மனிதன் தனது ஆளுமையை விருத்தி செய்ய இந்த விளையாட்டு மிகமுக்கியமானது. இன்று பாருங்கள் உலகலாவிய ரீதியாக எங்களது நாட்டின் கிரிகட் விளையாட்டு வீரர்களை ஏனையநாட்டவர் சிறப்பாக புகழ்ந்து கூறுவார்கள். ஏன் அது அவர்களின் இடைவிடாத பயிற்சி, உறுதியான நம்பிக்கை. அவர்களைப்போன்று பிரதேச, மாவட்ட, மாகாண, மட்டங்களிலும் பார்க்க சர்வதேச ரீதியாகவும் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கவேண்டும். அப்படி வெற்றியீட்டும் போது நாம் ஒவ்வொருவரையும் ஏனையவர்கள் புகழ்ந்து பேசுவார்கள்.
இப்படியான பிரதேசங்களில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் பயிற்சிகளையும் வழங்குவதற்கு பிரதேச செயலகங்கள் ஊடாக அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட உதவிகளை எம்மோடு இருக்கின்ற போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இருக்கின்றார். அவர் எமது பிரதேசத்தை சேர்ந்தவர் அவருக்கு நன்றாக தெரியும். இங்குள்ள இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகள்” என்று குறிப்பிட்டார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago