2025 மே 02, வெள்ளிக்கிழமை

சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு

Mithuna   / 2024 ஜனவரி 07 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு தலைமையக பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை வாவிக்கரை வீதியில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பதில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் வீதியால் வந்து கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவரிடம் தெரிவித்ததையடுத்து குறித்த சட்டத்தரணி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .