Suganthini Ratnam / 2017 ஜூன் 15 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சக்திவாய்ந்ததொரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, நல்லிணக்கம் அவசியம் என்பதுடன், அந்த நல்லிணக்கத்தை இனங்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத் திறப்பு விழா, கல்லடியில் புதன்கிழமை (14) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'கடந்த காலத்தில் இந்த நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக, பல வழிகளிலும் நாங்கள் பிரிந்து நின்றபோதும், தற்போது இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நிலைமையை, இளைஞர் சக்தி ஏற்படுத்தியது.
"தற்போது இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து இனங்களையும் மதங்களையும் ஒன்றிணைத்து, சிறந்ததொரு நாட்டை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம்' என்றார்.
'மேலும், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் யொவுன்புர நிகழ்வை நடத்தி, இம்மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் திறமையை, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுசெல்லும் செயற்பாட்டை முன்னெடுத்தோம்.
"இளைஞர்களுக்கான 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும், 3,300 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்து, அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.
"இந்த நாட்டில் நல்லிணக்கம் இல்லாமல், வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்பதை உணர்ந்து, நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இதற்கு, அனைத்து இளைஞர், யுவதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
"இந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டே, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சர்வதேச சமூகமும் ஒத்துழைப்பு வழங்கும்' என்றார்.
'இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண அலுவலகத்தை இங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளும் கலந்தாலோசித்து, நியாயமான தீர்வை வழங்குவோம்' என்று அவர் கூறினார்.
3 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago