2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  வடமுனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்ற ஆறு நபர்களை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை வட்டார வன காரியலயத்தின் மேலதிக வன அதிகாரி எப்.எம்.ஷிபான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் ஏனைய மூன்று சந்தேக நபர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த வன அதிகாரிகள் குறித்த நபர்களை கைது செய்ததுடன் மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் இயந்திர கைவால், சிறிய உழவு இயந்திரம் 01, மாட்டு வண்டி 03, மாடுகள் ஆறு, முதுரை மரம் 02, வெள்ளை கருங்காலி மரம் 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X