Princiya Dixci / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களகப்பு, பூம்புகார் பகுதி வாவியில் அடையாளம் காணாத நிலையில் ஆணொருவர், கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர்.
இவர் சுமார் 70 வயதுடையவர் எனவும் இவர் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, மேற்படி படத்தில் உள்ளவரை அடையாளம் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026