Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஜூலை 14 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
"கல்குடா எதனோல் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு சட்டம் மதிக்கப்படவில்லை" என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மற்றும் நாடாளுளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "வாழைச்சேனைப் பிரதேசத்தில் சமூக நலனை பேணும் இரு அமைப்புகள் இணைந்து எதனோல் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுங்கள்.
ஆனால், நாங்கள் இதனை முன்னின்று செய்தால் அரசியலாக மாறிவிடும். அரசியலுக்கான நடவடிக்கை என அவர்கள் வாதாடுவார்கள். இதற்கு நாங்கள் தங்களுக்கு ஆதரவு வழங்குவோம். சிவில் அமைப்புக்கள் முன்வந்து நடவடிக்கைளை மேற்கொள்ளுங்கள்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதுடன், இதனை பிடிப்பதற்கு செல்ல பொலிஸார் பயப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் போதை மாத்திரை விற்பனை செய்வது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்தால் பொலிஸார் விற்பனையாளரிடம் தங்களை காட்டிக் கொடுப்பதாக பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தெரிவித்துள்ளதாகவும் இவ் விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுகின்றது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .