2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு ; இருவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து உழவு இயந்திரங்கள் இரண்டில் ஓட்டமாவடி பிரதேசத்துக்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருவர், நேற்று (11)கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இவர்களை, கோறளைப்பற்று, தியாவட்டுவானிலும் அறபா நகரிலும் கைது செய்ததாகவும் இதன்போது மண் ஏற்றி வந்த உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.   

கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்திய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள் சேனை, வாகனேரி, தரிசேனை ஆத்துச்சேனை போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்கள் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில், அதனைத் தடுக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரயின் பணிப்புரைக்கமைய பல்வேறு வேலைத் திட்டங்கள் மாவட்டம் தோரும் இடம்பெற்று  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .