2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை, முந்தணி ஆறு  சிவத்தப்பாலத்தை அண்மித்த பகுதியில், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 08 பேரை, வவுணதீவு விசேட அதிரடிப்படையினர், இன்று (02) கைதுசெய்துள்ளனர்.

மணல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட 08 உழவு இந்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளனவென, அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், சட்ட நடவடிக்கைக்காக ஏறாவூர்ப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரங்களும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.சி.கே. மாக்கவித்த தலைமையிலான குழுவினர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X