2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; லொறி மீது துப்பாக்கிச் சூடு

கனகராசா சரவணன்   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து எடுத்துச் சென்ற லொறியை நிறுத்துமாறு பணித்தபோதும்,  அதனையும் மீறிச் சென்ற அந்த லொறி மீது, பொலிஸார்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, லொறியை மடக்கிப்பிடித்த பொலிஸார், லொறி சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம், மட்டக்களப்பு – வாழைச்சேனை, காவத்தமுனை பிரதேசத்தில் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், காவத்தமுனை பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது,  லொறியொன்றில், சட்டவிரோதமாக மணல் எடுத்துச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, லொறியை நிறுத்துமாறு, மாவட்ட விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பணித்துள்ளனர்.

அதனையும் மீறி, சாரதி லொறியை செலுத்திச் சென்றபோது, லொறியின் ரயர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, லொறியை மடக்கிப் பிடித்து, சாரதியை கைது செய்தனர் என, வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X