2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஊரடங்குச்சட்டத்தையும் மீறி, கசிப்பு தயாரிப்பு மற்றும் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளதுடன் சட்டவிரோத  மதுபான விற்பனையும்  அதிகரித்துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, கடந்த 20ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் போது, மதுபான கடைகளைத் திறக்க அரசு தடைவிதித்துள்ளது. 

இதனை சாதகமாக பயன்படுத்தி, சட்டவிரோத கசிப்பு ஊற்பத்தியில் பலர் ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில், வாகரை, ஆயித்தியமலை, கரடியனாறு, வாழைச்சேனை, ஏறாவூர், கொக்கட்டிச்சோலை ஆகிய பொலிஸ் பிரிவிகளிலுள்ள மாங்கேணி, ஓமனியாமடு, சந்தனமடு, போன்ற பல பிரதேசங்களில் உள்ள ஆற்றுப்பகுதிகளைக் கொண்ட காட்டு பகுதிகளில், அதிகமானவர்கள் தமது தொழிலாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 

இதேவேளை, குறித்த பொலிஸ் நிலைய பிரிவுகளில் கசிப்பு, மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X