2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி; வலைகள் மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஜூன் 07 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்றொழில் அமைச்சால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக் கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் கடற்படையினரின் உதவியுடன், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றிவளைப்பின்போது, தடைசெய்யப்பட்ட பெருமளவிலான வலைகள் கைப்பற்றப்பட்டனவென, மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ருக்நசான் குரூஸ் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பு, நாவலடி, வலையிறவு, கல்லடி வாவிகளில் நேற்று (06) மாலை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பியோடிவிட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வலைகள், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளனவென, உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடிப்பதால், இம்மாவட்டத்தில் பல வகையான மீனினங்கள் அழிந்து வருகின்றனவென, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X