2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க புதிய நடைமுறை

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபடுவதனைத் தடுத்து, அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புதிய திட்டம் பின்பற்றப்படவுள்ளது.

இதனடிப்படையில், சட்டவிரோத மீன்பிடி வலைப் பயன்பாடு தொடர்பான விடயங்களை ஆராயும் விசேட கூட்டம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் றுக்சான் குறூஸின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது.

“சட்டவிரோத வலைகள் பயன்படுத்துவதால் சிறிய மற்றும் நடுத்தர மீனவர்களின் தொழில் பாதிப்புறுவதுடன், மீன் இனங்கள் அழிவடைவதுடன், கடல் வளங்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

“இதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, களுவாஞ்சிக்குடி, மன்முணை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகமாக சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும் அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

“இதில் பொலிஸார், கடற்படையினர், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன், பிரதேச செயலகம், கடற்றொழில், நீரியல் வளத்துறை உத்தியோகத்தர் குழாம் இணைந்து செயற்படவுள்ளனர்” என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .