2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மாடுகள் கொண்டுசெல்வதைத் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு அழைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மாடுகள் கடத்தலைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச தினக்கூட்டம், பிரதேச செயலகக் கேட்போர்கூட மண்டபத்தில் இன்று (06) இடம்பெற்ற போதே, இதனைக் குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வழங்கப்படுவதாகவும் அதேவேளை, அவ்வாறு கொண்டு செல்லப்படும் மாடுகள் சிலவற்றை, பிரதேச செயலக, கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஊடாகப் பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளனவெனத் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், தொடர்ச்சியாக மாடுகள் கடத்தப்படுகின்றமை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று தெரிவித்த அவர், இவற்தைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

மேலும், மாலை, இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடும் மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இந்த ஒன்றுகூடலில், பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததுடன், பொலிஸார் தொடர்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், இது தொடர்பில் எழுத்துமூலமான அறிவித்தலை அரசாங்க அதிபருக்கு வழங்குதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X