Niroshini / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வியாழக்கிழமை பொது நிருவாக மண்டபத்தில் வந்தமர்ந்து கொண்ட மாணவர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர், சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீடங்களைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வகுப்புத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்த வகுப்புத் தடை நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தே மாணவர்கள் இந்த சத்தியாக்கரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பல தடவைகள் கலந்துரையாடியபோதிலும், குறித்த மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்க நிருவாகம் முன்வரவில்லையென மாணவர்கள தெரிவித்தனர்.
பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி சீரான நிருவாகத்துக்கு இடைஞ்சலின்றியும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடக்கும் ஏனைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடைஞ்சலாக இருக்காத வகையிலும் பல்கலைக்கழகத்தை வழி நடாத்த வேண்டும் என்பதாலேயே தாம் குறித்த சில மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்தது.
ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குறித்த மாணவர்கள் மீதான வகுப்புத்தடை, அடுத்த 2 மாத காலத்தில் முடிவடையவுள்ளதாகவும் பல்கலைக்கழக நிருவாகம் மேலும், தெரிவித்தது.
இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் தொடர்ந்து போராடவிருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago