Freelancer / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (17) இயந்திர படகில் மூன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் நேற்று (18) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அவருடன் சென்ற இரண்டு மீனவர்களும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
கடலுக்குச் சென்று மரணமடைந்த நபர் மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இப்றா லெப்பை கலீல் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago